ஸ்ரீலங்கா சோசலிஸ்ட் கட்சி மற்றும் ஆசியா கம்யூன் ஆகியவற்றின் கூட்டு செய்தி அறிக்கை.
ஈஸ்டர் ஞாயிறு படுகொலை:உண்மையை வெளிக்கொணரக் கோரும் பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்! கொழும்பு பேராயர் கர்தினால் மல்கோம் ரஞ்சித் அவர்கள், இன, மத பேதமின்றி,ஏப்ரல் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பிலிருந்து நீர்கொழும்புக்கு ஈஸ்டர் ஞாயிறு படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒன்றிணைந்து ஈஸ்டர் ஞாயிறு படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான உண்மையும் நீதியும் கோரி வலுவான மனிதச் சங்கிலியை உருவாக்குமாறு இலங்கையின் அனைத்து குடிமக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் இந்தக் கோரிக்கையை இலங்கை...